கோவை காமாட்சிபுரி ஆதீனம், சக்தி பீடம் நவக்கிரக கோட்டையில், ரதசப்தமியையொட்டி, சூரிய வழிபாடு நடைபெற்றது. காமாட்சிபுரி ஆதினம் சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சூரியபகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். சூரியவேள்வியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வீரசிவாஜிக்கு இ.ம.க., மரியாதைமராட்டிய மாமன்னன் சத்ரபதி வீரசிவாஜியின் பிறந்தநாளையொட்டி, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் மாநில செயலாளர் செந்தில்குமார், ராஜவீதி தேர்நிலைத்திடலில், அவரது உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அக்கட்சி பிரமுகர்களும், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்வங்கிகள் தனியார் மயமாக்கல், அரசு பங்குகளை விற்பது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள பாங்க் ஆப் பரோடா வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் மனோகரன் தலைமையில், பொது செயலாளர் மீனாட்சி சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மினி கிளினிக் திறப்புதொண்டாமுத்துார் ஒன்றியத்தில், புதிதாக கட்டப்பட்ட, சமுதாயக்கூடம், வடிவேலம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம், சாடிவயல் பல்நோக்கு மைய கட்டடத்தை, அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.நல்லுார் வயலில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பின், ஜாகீர்நாயக்கன்பாளையம், விராலியூர், கெம்பனூர் ஆகிய பகுதிகளில், 'அம்மா' மினி கிளினிக் திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு, அரசின் ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கினார்ஒன்றிய தலைவி மதுமதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.காங்., கட்சியினர் ஊர்வலம்மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது; மாவட்ட காங்., தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். முன்னதாக, கீதா ஹால் ரோடு, காமராஜ் பவனில் இருந்து, தெற்கு தாசில்தார் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, நிர்வாகிகள் காந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், சண்முகம், உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதுவரை, 3,884 பேருக்கு தடுப்பூசி!கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்று, 174 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 74 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை, முதல் தவணை தடுப்பூசி, 3,668, இரண்டாம் தவணை தடுப்பூசி, 216 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை, 3,884 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, இ.எஸ்.ஐ., டீன்நிர்மலா தெரிவித்தார்.16 பேருக்கு கண் அறுவை சிகிச்சைஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி ரோட்டில் உள்ள, மாநகராட்சியின் இரவு நேர தங்கும் காப்பகத்தில் நடந்த, கண் சிகிச்சை முகாமில், 140 பேருக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது; 16 பேருக்கு, அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஐ பவுண்டேஷன், துளசி பார்மஸி மற்றும் புகலிடம் அறக்கட்டளை சார்பில் நடந்த இம்முகாமில், சுகாதார ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE