செஞ்சி : செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் விபத்துகளை தடுக்க தினமலர் சார்பில் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு ஐந்துபேரிகார்டுகள் வழங்கப்பட்டது.
செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. குறிப்பாக, விபத்துகள் அதிகம் நடக்கும் ஆலம்பூண்டி கூட்ரோடு, சத்தியமங்கலம், பாலப்பாடி கூட்ரோடு, கடலாடிகுளம் கூட்ரோடு, மேல்பாப்பாம்பாடி ஏரிக்கரை உள்ளிட்ட இடங்களில் போலீசார், பேரிகார்டு அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.இந்த இடங்களில் பயன்படுத்திட, தினமலர் நாளிதழ் சார்பில் 5 பேரிகார்டுகளை நேற்று சத்தியமங்கலம் காவல் நிலையஇன்ஸ்பெக்டர் தங்ககுருநாதனிடம், புதுச்சேரி தினமலர் அலுவலர் சுரேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் சையத் முகமது அலி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூங்காவனம், ஊழியர்கள் பாலாஜி, தினகரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE