சிங்கம்புணரி: தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியகருப்பன் திருப்புத்துார் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நமது தோழமை இல்லாமல்அவர் வெற்றி பெற்றிருக்கமுடியாது என முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேசினார்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்., வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் காங்., முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: காங்., நிர்வாகிகளுக்கு கூட்டணி கட்சிகள் பூத் கமிட்டி பணத்தை சரியாகபிரித்துக் கொடுப்பது கிடையாது என்பது நியாயமான குற்றச்சாட்டு தான்.ஆனால் அதற்கேற்றாற்போல் நாமும் பூத் ஒன்றுக்கு 20 பேரையாவதுநியமித்து அழைத்து சென்றால் தானே அவர்கள் நம்மை மதிப்பார்கள்.2019 லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெரியகருப்பன் திருப்புத்துார் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நமது தோழமை இல்லாமல் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதே போல் அவரது தோழமை இல்லாமல் நாமும் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் துணை. துணை என்றாலும் கூட்டணி கட்சிக்கு இணையான பலத்தை நாம் காட்டினால் தான் அவர்கள் நம்மை மதிப்பார்கள்.நான்கு ஆண்டுகள் நீண்ட உறக்கத்தில் முதல்வர் பழனிசாமி இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிறார். ஊரடங்கு காலத்தில் ஊரடங்கை மீறியவர்கள் மீது போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லுகிறார்கள். அவசர ஆத்திரத்துக்கு வெளியே வந்தவர்கள் மீது எல்லாம் வழக்குப்போட்டு விட்டு தேர்தலுக்காக வாபஸ் என்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE