மதுக்கரை:மதுக்கரை அருகே, கார் கடத்தப்பட்ட சம்பவத்தில், லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம், மண் ணார் காடு, நாட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா,34. கடந்த, ஜன., 11ல், காரில், சாஜாஹூசேன் என்பவருடன் கோவை வந்தார். அன்றிரவே, மண்ணார்காடுக்கு பயண மாகினர். கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கரை மரப்பாலம் ரயில்வே பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால், இவர்களும் காரை நிறுத்தினர்.அவர்களை தொடர்ந்து வந்த காரிலிருந்து இறங்கிய நான்கு பேர், முஸ்தபா கார் கண்ணாடியை உடைத்தனர். இருவரையும் தாக்கி, வெளியே தள்ளி, காரை கடத்திக்கொண்டு, கேரளா நோக்கிச் சென்றனர். கடத்தப்பட்ட கார், கன்னியாகுமரி மாவட்டம், மித்திரவிளை பகுதியில் மீட்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை வைத்து, மதுக்கரை போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.கார் முன் நிறுத்திய லாரி, திருச்சூரில் இருப்பது தெரிந்தது. அதன் டிரைவர் முகமது அப்சல்,28 நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், 'தாங்கள் செல்லும் காரின் முன் லாரியை நிறுத்த வேண்டும். அதற்காக, 50 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒரு கும்பல் கூறியது. அவர்கள் கூறியதுபோல் செய்தேன். மற்றபடி அவர்களுடன் தொடர்பு இல்லை' என கூறியுள்ளார். அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE