காரைக்கால்:திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம், கூடுதலாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானை தரிசிக்க, நேற்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில், கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையில் வரவேற்றனர்.
தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர், அம்பாள் சுவாமிகளை, குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். சனீஸ்வர பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். ஒன்பது எள் தீபம் ஏற்றி, சுவாமி தரிசனம் செய்தார்.
அதிகாரிகள் மாற்றம்?
இதற்கிடையில், கவர்னர் மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிகளுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறும்போது, 'சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE