ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் வருவாய்த் துறையினர் நேற்று அதிகாலை அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது வக்காரமாரி அருகே மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தினர். வண்டியை நிறுத்திய மூவரும் தப்பி ஓடினர்.உடன் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளையும் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.ஆர்.ஐ., குமாரகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE