அந்தியூர்:''விரைவில், 2ஜி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுடன், இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பா.ஜ.,வில், பல்வேறு கட்சியினர் இணையும் விழா, ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் பாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, அண்ணாமலை கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல, ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
ஊழலுக்கு வித்திட்டது, தி.மு.க., தான். '2ஜி' வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுடன், இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பா.ஜ.,வை பொறுத்தவரை, சென்ட்ரல் பார்லிமென்டரி அமைப்பு உள்ளது. அவர்கள் தான் வேட்பாளர்களை அறிவிப்பர். கூட்டணியில் பிரச்னையின்றி, தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE