தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது.கவிஞர் நாகை ஆசைத்தம்பி எழுதிய, 'இறகைத் தேடும் சிறகுகள்' ஹைகூ கவிதை நுால் மற்றும் பாலாஜி எழுதிய 'பெருங்கற்காலம்' தொல்லியல் நுால் வெளியிடப்பட்டது. நுால்களை, அமைப்பின் நிர்வாகி பரமேஸ்வரன் வெளியிட, கவிஞர் சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.கவிஞர் ரவீந்திரன் பேசியதாவது:ஹைகூ என்றால், மூன்று வரிகளால் எழுதப்படும் சிறிய கவிதை. ஜென் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜப்பானியர்களால் எழுதப்பட்ட இந்த கவிதைகள், தமிழிலும் ஏராளமாக எழுதப்படுகின்றன.இவர், ஏற்னவே மூன்று ஹைகூ கவிதை நுால்களை எழுதி இருக்கிறார். இந்த நுால் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு, ஒரே நுாலாக வந்திருப்பது புதுமை. இதுவரை இப்படி ஒரு பன்மொழி கவிதை நுால், தமிழில் வரவில்லை. எல்லா கவிதைகளும் இயற்கையை நேசித்து எழுதப்பட்டு இருப்பது சிறப்பு.இவ்வாறு, அவர் பேசினார்.வக்கீல் சத்தியவாணி, கவிஞர்கள், தங்கமுகேசன், கரீம், வெங்கடேசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE