அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார் : 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என தி.மு.க., மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கூறினார். தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசார பாடல் சைக்கிள் ஊர்வலம் கடலுார் கிழக்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமையில் வழிசோதனைப்பாளையத்தில் துவங்கியது.நிகழ்ச்சியில் கடலுார் தெற்கு ஒன்றிய செயலர் காசிராஜன்,

கடலுார் : 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என தி.மு.க., மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கூறினார்.

தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசார பாடல் சைக்கிள் ஊர்வலம் கடலுார் கிழக்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமையில் வழிசோதனைப்பாளையத்தில் துவங்கியது.நிகழ்ச்சியில் கடலுார் தெற்கு ஒன்றிய செயலர் காசிராஜன், குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், பாலமுருகன், வி.ஆர்., டிரஸ்ட் விஜயசுந்தரம், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மீனவரணி தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக வளர்ச்சி முடக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இருண்ட அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும்.ஸ்டாலின் பிரசார பாடலை மக்களிடம் கொண்டு சென்று புரட்சி உருவாக்க உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X