கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், எழுத்தாளர் கோவை கோகுலன் எழுதிய கவிதை நுால் மற்றும் சிறுகதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.எழுத்தாளர் கோகுலன், ஏற்புரையில் பேசுகையில், ''கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டில் முடங்கி இருந்தபோது, ஆறுதலாக இருந்தது புத்தகங்கள் மட்டுமே. முக்கியமான புத்தகங்களை படிக்க முடிந்தது. எழுத நினைத்த விஷயங்களை எழுத முடிந்தது. ஏற்கனவே எழுதிய கவிதைகளை நுாலாக தொகுத்தேன். புதிய சிறுகதைகள் எழுதினேன். தனிமை காலத்தின் அடையாளமாக, இவ்விரண்டு நுால்களை எழுதி இருக்கிறேன். இவை, நவீன மொழியில் எழுதப்பட்ட கதைகள் அல்ல. சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதைகளாகும்,'' என்றார்.கவிஞர் நம்பிக்கை நாகராஜன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முகில்தினகரன் வரவேற்றார். பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா, நுாலை வெளியிட, புவனேஸ்வர் தமிழ்ச்சங்க தலைவர் துரைசாமி பெற்றுக்கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE