சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் திருட்டு: சிறுவன் கைது

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திட்டக்குடி : ராமநத்தம் அருகே பைக் திருடிய வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருளழகன். இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பல்சர் பைக் கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி காணாமல் போனது. புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் ராமநத்தம் மேம்பாலத்தின்

திட்டக்குடி : ராமநத்தம் அருகே பைக் திருடிய வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருளழகன். இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பல்சர் பைக் கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி காணாமல் போனது. புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் ராமநத்தம் மேம்பாலத்தின் கீழ் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில் திருடு போன அருளழகன் பைக் என்பது தெரியவந்தது.உடன், சிறுவனை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X