அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்களை தடுப்பது ஜனநாயக விரோதம் ஏகத்துவ ஜமாத் இப்ராஹிம் ஆவேசம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
மதுரை:''நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு ரத யாத்திரையை தடுப்பதும், மதநல்லிணக்கத்தை எடுத்து சொல்லும் எங்களை, போலீசார் தடுப்பதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் தெரிவித்தார்.மதுரை, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில், ராமஜென்ம பூமி நிதி சமர்ப்பண ரத யாத்திரையை, இப்ராஹிம் துவக்கி வைத்தார். முன்னதாக, இப்ராஹிம் பங்கேற்க, போலீசார் கெடுபிடி
 எங்களை தடுப்பது ஜனநாயக விரோதம் ஏகத்துவ ஜமாத் இப்ராஹிம் ஆவேசம்

மதுரை:''நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு ரத யாத்திரையை தடுப்பதும், மதநல்லிணக்கத்தை எடுத்து சொல்லும் எங்களை, போலீசார் தடுப்பதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மதுரை, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில், ராமஜென்ம பூமி நிதி சமர்ப்பண ரத யாத்திரையை, இப்ராஹிம் துவக்கி வைத்தார். முன்னதாக, இப்ராஹிம் பங்கேற்க, போலீசார் கெடுபிடி செய்தனர்.இப்ராஹிம் கூறியதாவது:மத நல்லிணக்கம் மற்றும் ரத யாத்திரை குறித்த தவறான புரிதல்களை உடைக்க, ஒரு முஸ்லிம் துவக்க வேண்டும் என்பதற்காக, நானே துவக்கி வைத்தேன். ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவது, எந்த மதத்தினர் மனதையும் புண்படுத்தாது. மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தும்.

ரதயாத்திரைக்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகும், போலீஸ் துறை தடுப்பது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. தொடர்ந்து, போலீஸ் துறை, ஒரு சிலரின் அச்சுறுத்தலுக்கு பயந்து, மதநல்லிணக்கத்தை எடுத்து சொல்லக்கூடிய எங்களை போன்றவர்களை தடுத்து வருகிறது.

முஸ்லிம் மக்கள், ஒவ்வொரு மதத்திற்கான நம்பிக்கையை புண்படுத்த கூடாது என நன்றாக புரிந்துள்ளனர். ஆனால், முஸ்லிம் அமைப்புகள் என்ற பெயரில் உள்ள எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., - த.மு.மு.க., போன்றவர்கள் தான் திட்டமிட்டு பிரச்னையை கிளப்புகின்றனர்.இவர்கள், பிற மத நம்பிக்கையை அவர்களாக அல்லது ஹிந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துபவர்களை தங்கள் மேடையில் அமர வைத்து, இழிவுபடுத்துவதன் மூலம் முஸ்லிம், ஹிந்து மக்களுக்கு இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துகின்றனர்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக, தி.மு.க., கூட்டணிக்கு அடிபணிந்து, குறிப்பிட்ட இயக்க தலைவர்கள் வளம் பெற, முஸ்லிம் சமுதாயத்தை பலிகடா ஆக்குகின்றனர். வன்முறையை துாண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதபட்சத்தில், தமிழகம் அமைதி பூங்கா என்பது கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X