சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நல சங்கத்தினர் கோரிக்கைககளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். வயது வரம்பு கணக்கிடாமல் தகுதி உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
வட்ட தலைவர் சேகரன், சுப்ரமணியன், மேரிபுளோரா, முருகேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன், செம்பியன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, ராசமாணிக்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.வட்ட செயலாளர் அருளப்பன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE