சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் கடலுார் மேற்கு மாவட்ட புவனகிரி சட்டசபை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். கோட்ட அமைப்பாளர் குணசேகரன், மாவட்ட மேற்பார்வையாளர் தேவ சரவணசுந்தரம், ஓ.பி.சி., அணி மாநில துணைச் செயலாளர் சாய்சுரேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.மாநிலச் செயலாளர் வரதராஜன் வரும் சட்டசபை தேர்தலில் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் வெற்றிவேல், ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி, சுகந்தா செல்வகுமார், ஊடகப் பிரிவு அருணாச்சலம், காந்திராஜ், ராம்பிரபு, ஒன்றிய தலைவர் ராஜா, கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE