சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளர் நியமனத்தில் முறைகேடு சப் கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில், கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட அணைகரை கோட்டாலம், அரசம்பட்டு, கடுவனுார், மோகூர், பரமநத்தம், பீளமேடு, சங்கராபுரம் ஆகிய 7 ஊராட்சியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.இப்பணியிடத்தை நிரப்ப கடந்த

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில், கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட அணைகரை கோட்டாலம், அரசம்பட்டு, கடுவனுார், மோகூர், பரமநத்தம், பீளமேடு, சங்கராபுரம் ஆகிய 7 ஊராட்சியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.இப்பணியிடத்தை நிரப்ப கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதியில் இருந்து 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஜனவரி 18, 19 தேதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்க்காணல் நடந்தது. இதில், அணைகரை கோட்டாலத்தில் 11 பேரும், பரமனத்தத்தில் 13 பேரும் விண்ணப்பத்திருந்தனர்.

இந்நிலையில், கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, அணைக்கரைக்கோட்டாலம் மற்றும் பரமனத்தம் கிராம மக்கள் நேற்று, கள்ளக்குறிச்சி சப் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனுவில், எங்கள் ஊராட்சியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மூலமும், பொதுமக்களிடமிருந்து லட்ச கணக்கில் பணம் பெற்றுக்கொண்டும், தகுதியில்லாத நபர்களுக்கு முறைகேடாக பணி வழங்கப்படுகிறது.எனவே, இதை மறுபரிசீலனை செய்து, எங்களது ஊராட்சியிலேயே உள்ள தகுதி வாய்ந்த நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X