பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போல இணைய ஊடகங்கள் இல்லாதபோது, தகவல் பரிமாற்றத்திற்கு அத்தியாவசியமாக தபால் பட்டுவாடா இருந்தது.முக்கியத்துவம் வாய்ந்த தபால்களை, மிக விரைவாக கொண்டு சேர்க்கும் விதமாக, 1911ம் ஆண்டு, பிப்., 18ல், இந்தியாவின் முதல் விமான அஞ்சல் சேவை, அலகாபாத்தில் துவங்கப்பட்டது.இதுகுறித்து, முன்னாள் தபால்அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:யமுனை நதி கரையோரம் இருந்த, மைதானத்தில் இருந்து மாலை, 5:00 மணியளவில், தபால்களை ஏற்றிய சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. தரையிலிருந்து, சுமார், 120 முதல் 150 அடியில் பறந்த இந்த விமானம், யமுனை நதியை கடந்து, 13 நிமிட பயணத்தில், 15 கி.மீ.,க்கு அப்பால் உள்ள நைனி ரயில்வே சந்திப்பில் தரையிறங்கியது.முதல் அஞ்சல் சேவை விமானத்தை,ஹென்ரி பீக்கே என்ற, 23 வயது பிரெஞ்சு விமானி இயக்கினார்.முன்னதாக, 1800களில், பலுான் மற்றும் கிளைடர்கள் மூலம் தபால் கொண்டு செல்லப்பட்டது.இதில், ஆறாயிரத்து, 500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக, மோதிலால் நேரு, அப்போது இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த, தனது மகன் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதமும், இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ்க்கு எழுதப்பட்ட கடிதமும் கொண்டு செல்லப்பட்டது.இக்கடிதங்கள் மீது, 'முதல் ஏர் மெயில்' எனப்படும், முதல் வான் அஞ்சல் சிறப்பு முத்திரையும், விமானத்தின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. நாட்டின் முதல் வான் அஞ்சல் சேவையை சிறப்பிக்கும் வகையில், 1961ம் ஆண்டு, 50 பைசா, 15 பைசா மற்றும்3 ரூபாய் மதிப்பில்,சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE