சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே திடீரென பெய்த மழையால் தற்காலிக கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமாயின. பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், நரசிங்கமங்கலம், மாளிகைக் கோட்டம், கொசப்பள்ளம், துறையூர், முருகன்குடி உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் முதல் சம்பா நெல் அறுவடைப் பணிகள் துவங்கி நடந்து

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே திடீரென பெய்த மழையால் தற்காலிக கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமாயின.

பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், நரசிங்கமங்கலம், மாளிகைக் கோட்டம், கொசப்பள்ளம், துறையூர், முருகன்குடி உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் முதல் சம்பா நெல் அறுவடைப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.அறுவடை செய்த நெல்லை அந்தந்த பகுதியில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு விவசாயிகள் மூட்டைகளாக அடுக்கியும், கொட்டியும் வைத்துள்ளனர்.

பணியாளர்கள் பற்றாக்குறையால் கொள்முதல் செய்யும் பணி மந்தமாக நடப்பதால் மாளிகைக்கோட்டம், வெண்கரும்பூர். தாழநல்லுார், திருமலை அகரம், கிளிமங்கலம், பெண்ணாடம் பகுதியில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக் கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் திடீரென மழை பெய்ததால், மாளிகைக்கோட்டம் நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் கொள்முதல் செய்த மற்றும் விற்பனைக்கு வந்தவை என 2,000 நெல் மூட்டைகள் நனைந்து சேமதமடைந்தன.

திடீர் மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம்ஸ்ரீமுஷ்ணம், மேல்புளியங்குடி, தேத்தாம்பட்டு, ஸ்ரீஆதிவராகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நெல்லைக் கொட்டி வைத்துள்ளனர்.நேற்று அதிகாலை, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் திடீரென கன மழை பெய்தது. இதில் பள்ளமான பகுதியில் போடப்பட்டிருந்த நெல் தரைப்பகுதி வழியாக தண்ணீர் தேங்கி நெல் மணிகள் ஈரமானது.

இதனால், விவசாயிகள் அவசர அவசரமாக பள்ளமான பகுதிகளில் இருந்த நெல்லை மேடான பகுதிக்கு மாற்றினர்.ஸ்ரீமுஷ்ணம் நெல் கொள்முதல் நிலையத்தின் அருகிலேயே இருக்கும் கிராவல் மண் மேட்டை அகற்றி அருகில் உள்ள பள்ளங்களில் போட்டிருந்தால் மழைநீர் பள்ளங்களில் தேங்காமல் வழிந்தோடி இருக்கும். நெல்லும் ஈரமாகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும்.சம்பா பருவம் ஆரம்பமானது முதல் மழையால் பாதித்த நிலையில், தற்போது விற்பனைக்கு வந்த நிலையிலும் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சிறுபாக்கம்சிறுபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் சிறுபாக்கம் தற்காலிக கொள்முதல் நிலையத்தில் 4,000 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.நேற்று அதிகாலை சிறுபாக்கம் பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால், விற்பனைக்கு வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின. மேலும், பதப்படுத்தப்பட்ட மக்காச்சோளமும் மழையால் பாதித்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X