செல்லனுார், புதுக்காலனியைச் சேர்ந்தவர் பத்மாவதி; பேரூராட்சி ஊழியர். இவருடைய மகன் முத்துமாணிக்கம்,19; தனியார் மில் துாய்மை பணியாளர். முத்து மாணிக்கம் நேற்றுமுன்தினம் இரவு, 10:30 மணிக்கு, ஸ்கூட்டரில் சத்தி ரோட்டில் இருந்து செல்லனுார் நோக்கிச் சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்து விழுந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை. முத்துமாணிக்கம் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள், முத்துமாணிக்கம் இறந்து கிடப்பதைப் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் துாக்கிட்டு தற்கொலைவடவள்ளி, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ்; தனியார் நிறுவன மார்க்கெட்டிங் மேலாளர். இவருக்கு ஸ்ரீசத்யா,38, என்ற மனைவி, 2 மகன்கள். பணி நிமித்தமாக, செல்வகணேஷ் வெளியூர் செல்வதாகவும், திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோருடன் இருக்க வேண்டுமென, மனைவியிடம் கூறியுள்ளார். மாமனார், மாமியார் வீட்டுக்குச் செல்ல சத்யாவுக்கு விருப்பமில்லை.மனவருத்தத்தில் இருந்த அவர், கணவர் மற்றும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, படுக்கையறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்து கதவை தட்டினர். திறக்காததால், அருகில் இருந்தவர்களை அழைத்து, கதவை உடைத்துப் பார்த்தபோது, சத்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.மொபைல்போன் திருட்டு; ஒருவர் கைதுகோவை, காட்டூர் பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன்,46. நேற்று முன்தினம், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கில் நின்று கொண்டிருந்தார். ஒருவர், கண்ணனின் பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை பிடித்த கண்ணன், காட்டூர் போலீசிடம் ஒப்படைத்தார். விசாரணையில், கவுண்டம்பாளையம், பிரபு நகரை சேர்ந்த தாஸ்,41 என தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE