கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியில் கண் பாதிப்பு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : பிப் 20, 2021
Share
Advertisement
மதுரை:கொரோனா தடுப்பு பணியில், கிருமி நாசினி சிதறி கண் பார்வை பாதித்தவர் இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சாந்தி தாக்கல் செய்த மனு:என் கணவர் மாரிமுத்து. கொனோரா தடுப்பு பணியில், மதுரை மாநகராட்சியில், ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்தார். மாநகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி

மதுரை:கொரோனா தடுப்பு பணியில், கிருமி நாசினி சிதறி கண் பார்வை பாதித்தவர் இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சாந்தி தாக்கல் செய்த மனு:என் கணவர் மாரிமுத்து. கொனோரா தடுப்பு பணியில், மதுரை மாநகராட்சியில், ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்தார். மாநகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி சேமித்து வைத்திருந்த கன்டெய்னரை, 2020 நவ., 17ல் திறக்க முயன்றார்.கெமிக்கல் சிதறி வெடித்ததில், கணவரின் உடலில் பரவியது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கண் பார்வை, 90 சதவீதம் மற்றும் உணவுக்குழாய், வாய், வயிறு பாதித்துள்ளது. திரவ உணவு மட்டுமே உட்கொள்ள முடிகிறது.பணியின்போது, அவருக்கு உடல் முழுதும் மறைக்கும் ஆடை, முகத்தை மறைக்கும் கவசம் உட்பட பாதுகாப்பு சாதனங்களை வழங்கவில்லை. சம்பவத்தின்போது, மாநகராட்சி அலுவலகத்தில் முதலுதவிப் பெட்டி இல்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. வருவாயின்றி இரு குழந்தைகளுடன் சிரமப்படுகிறோம்.கணவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

மனிதநேய அடிப்படையில் எனக்கு அரசுப் பணி, தகுந்த இழப்பீடு வழங்கக் கோரி தமிழக அரசு, மாநகராட்சிக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதி வி.பார்த்திபன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர், சுகாதாரத் துறை செயலர், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மார்ச் 9க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X