தியாகதுருகம் : தியாகதுருத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 நிழற்குடைகள் திறப்பு விழா நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே ரூ. 4 லட்சம் செலவிலும், துணை மின் நிலையம் எதிரில் ரூ. 3 லட்சம் செலவில் இரு நிழற்கடைகள் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.இதனை பிரபு எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பி.டி.ஓ., ரங்கராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் மணிவண்ணன், சாமிதுரை, அய்யம்பெருமாள், ஜெயச்சந்திரன், கிருஷ்ணராஜ், குமரவேல், பரியாஸ், ரமேஷ், பாலகிருஷ்ணன், குமார், மணிவண்ணன், ஜெயபிரகாஷ், ராஜேந்திரன், மூர்த்தி, வேல்நம்பி, கதிர்வேல், மஞ்சமுத்து, சிவா, பாலமுரளி கிருஷ்ணன், சங்கர், துரைசீனு, ஏழுமலை, உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE