விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தில் கருவேப்பிலங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ராஜா வரவேற்றார். மருத்துவர்கள் சுகந்தி, முகமது ரிஸ்வான், சித்த மருத்துவர் அலமேலு, ஒன்றிய சேர்மன் செல்லதுரை முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.மருத்துவ அலுவலர் சத்தியராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி, கண் மருத்துவர் நடராஜன், சுகாதார ஆய்வாளர்கள் நாட்டுதுரை, ராஜா, வீரமணி தீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், இருதயம், புற்றுநோய், எலும்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE