சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துார்ந்து போன கழிவுநீர் கால்வாய் தொற்று நோய் பரவும் அபாயம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் துார்ந்து சாக்கடை நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உழவர்சந்தை, மருத்துவமனைகள், தியேட்டர், பள்ளி, கடைகள் ஆகியவை உள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள மக்களின் வசதிக்காக

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் துார்ந்து சாக்கடை நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உழவர்சந்தை, மருத்துவமனைகள், தியேட்டர், பள்ளி, கடைகள் ஆகியவை உள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சாலையோர கழிவுநீர் கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி அடைத்துள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் அப்பகுதியிலேயே தேங்கி நிற்கிறது.தினமும் தண்ணீர் தேங்குவதால் சாக்கடை நீர் தற்போது வெளியேற துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் துார்ந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயினை சரி செய்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X