பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கக் கோரிக்கை

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சின்னசேலம் : கல்லாநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்லாநத்தம், தகரை, பாண்டியன்குப்பம் ஆகிய சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியை சுற்றியும் சுற்றுச்சுவர் வசதி இல்லதததால்,

சின்னசேலம் : கல்லாநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது.

சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்லாநத்தம், தகரை, பாண்டியன்குப்பம் ஆகிய சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியை சுற்றியும் சுற்றுச்சுவர் வசதி இல்லதததால், புதர்கள் மண்டி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.மேலும், இரவு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தை திறந்த வெளி 'பார்' ஆக மதுப்பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து சிலர் மது அருந்தி பாட்டில்களை அங்கேயே உடைக்கின்றனர்.

மேலும் பள்ளி நாட்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் வருவதால் மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனர்.எனவே, பள்ளி வளாகத்தில் சுற்று சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X