பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை

Added : பிப் 20, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நாளை நடைபெறும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு குமரகுரு எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார். உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கட்டப்படவுள்ளது.இதற்கான பூமி பூஜை நாளை 22ம் தேதி காலை 9:00 மணியில் இருந்து 10.30

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நாளை நடைபெறும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு குமரகுரு எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கட்டப்படவுள்ளது.இதற்கான பூமி பூஜை நாளை 22ம் தேதி காலை 9:00 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடக்கிறது.திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை:கோவில் கட்டுமான பணிக்களுக்கான பூமி பூஜை விழா நாளை மிக பிரமாண்டமாக நடக்கிறது. விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் திருப்பதி தேவஸ்தான போர்டு குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முன்னிலை வகிக்கிறார். மேலும், திருப்பதி தேவஸ்தான போர்டு குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ..க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.இது கட்சி விழா அல்ல. எனவே கட்சி, மத பேதமின்றி அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X