சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கூடலுார்:பெரியாறு அணை அருகே பேபி அணையைப் பலப்படுத்த 23 மரங்களை வெட்ட கடந்த 7 ஆண்டுகளாக அனுமதி தராத கேரள வனத்துறை, அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்டியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பெரியாறு அணையை ஒட்டியுள்ள வனபகுதியில் கேரள வனதுறையினர் வெட்டிய மரங்களின் தடிகள் அணைப்பகுதியில் அடுக்கி
 பெரியாறு அணையில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு

கூடலுார்:பெரியாறு அணை அருகே பேபி அணையைப் பலப்படுத்த 23 மரங்களை வெட்ட கடந்த 7 ஆண்டுகளாக அனுமதி தராத கேரள வனத்துறை, அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்டியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியாறு அணையை ஒட்டியுள்ள வனபகுதியில் கேரள வனதுறையினர் வெட்டிய மரங்களின் தடிகள் அணைப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுஉள்ளது. கேரள வனத்துறை அதிகாரி கூறும்போது, 'யானை வழித்தடங்களில் இடையூறாக இருந்த மரங்களை அகற்றி வருகிறோம். யானைகள் திசைமாறி செல்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை,' என்றார்.


அனுமதியில்லை:

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை பலப் படுத்திய பின் 152 அடி தேக்கலாம் என 2014 மே 7 ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பலப்படுத்துவதற்காக பேபி அணையை ஒட்டி இருந்த 23 மரங்களை வெட்ட இதுவரை கேரள வனத்துறை அனுமதி வழங்கவில்லை.புலிகள் சரணாலயம், சுற்றுச்சூழல் என்ற காரணத்தை முன்வைத்து அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் யானைகளுக்கு இடையூறு எனக்கூறி நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்டியது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முற்றுகையிட முடிவு:

ஐந்து மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய சங்க இணைச்செயலாளர்ரஞ்சித் கூறுகையில், ''மரங்கள் வெட்டி வருவது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு தெரிவிக்காதது வேதனையான விஷயம். இதை கண்டித்து கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X