சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 21 மாதம் சிறை

Added : பிப் 20, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கிய, கட்டட தொழிலாளிக்கு, 21 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. புதுச்சத்திரம் அடுத்த ராமநாதகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாச்சலம் மனைவி வசந்தி, 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 35; கட்டட தொழிலாளி. இவருக்கும், இடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மீண்டும் அவர்களுக்குள்,

பரங்கிப்பேட்டை : பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கிய, கட்டட தொழிலாளிக்கு, 21 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

புதுச்சத்திரம் அடுத்த ராமநாதகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாச்சலம் மனைவி வசந்தி, 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 35; கட்டட தொழிலாளி. இவருக்கும், இடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மீண்டும் அவர்களுக்குள், தகராறு ஏற்பட்டது. அதில், கோபி ஆத்திரமடைந்து, வசந்தியை இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.வசந்தி கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் கோபியை கைது செய்து, பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது சாதிக் உசேன் நேற்று, கோபிக்கு 21 மாதம் சிறை தண்டனை மற்றும் 2,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X