பொது செய்தி

தமிழ்நாடு

காப்பாளர் பெயரை மாற்ற அரசுக்கு வலியுறுத்தல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
தேனி:''பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி காப்பாளர்கள்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான தகுதி உடையவர்கள். எனவே 'காப்பாளர்' பெயரை விடுதி நல அலுவலர்' என தமிழக அரசு மாற்ற வேண்டும்'' என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தேனியில் வலியுறுத்தினார்.அவர் மேலும் கூறியதாவது:இதுதொடர்பாக ஆந்திரா மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. துறையின் மாவட்ட

தேனி:''பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி காப்பாளர்கள்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான தகுதி உடையவர்கள். எனவே 'காப்பாளர்' பெயரை விடுதி நல அலுவலர்' என தமிழக அரசு மாற்ற வேண்டும்'' என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தேனியில் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:இதுதொடர்பாக ஆந்திரா மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. துறையின் மாவட்ட தலைமைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்படு கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றியம் தெளிவாக கூறியுள்ளது.

ஏனெனில் காப்பாளராகபணி செய்பவர் அதே பதவியில் ஓய்வு பெறுகிறார். எனவே கூடுதல் கல்வித்தகுதி நிர்ணயித்து மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர், மிகவும் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் பதவிகளுக்கு காப்பாளர்களை நியமிக்க வேண்டும்.கள்ளர் சீரமைப்புத்துறை ஆசிரியர் சங்கங்களை இணைத்து ஒருங்கிணைந்த சங்கமாக உருவாக்கியுள்ளோம்.

பிற ஆசிரியர் சங்கங்களில் உள்ளதுபோல் இந்த ஆசிரியர்களின் விருப்ப அடிப்படையில் பணி நிரவல், மாறுதல்களை உருவாக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X