சின்னசேலம் : சின்னசேலத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக ஒரு வாரத்திற்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக சின்னசேலம், மரவானத்தம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், பங்காரம், வினைதீர்த்தாபுரம், தச்சூர், தென்கீரனுார், சிறுவத்துார், ராயர்பாளையம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார் மங்கலம், லட்சியம், காட்டனந்தல், தென்தொரசலுார், மேலுார், எரவார், பொற்படாக்குறிச்சி, விளம்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை 22ம் தேதி முதல் 28ம் தேதிவரை அவ்வப்போது மின் தடை ஏற்படும்.இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE