பொது செய்தி

தமிழ்நாடு

ராமர் கோவில் கட்ட பிராமணர்கள் நிதியளிப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பிராமணர் சமுதாயம் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு, ரூ. 87 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2024ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பினர் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பிராமணர் சமுதாயம் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு, ரூ. 87 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2024ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பினர் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகாதேவன், கோட்ட செயலாளர் செந்தில்முருகன், நகர தலைவர் வைஷ்ணவி தாமோதரன், மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

கள்ளக்குறிச்சி பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் அண்ணா சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், ராஜ்பிரசன்னா, ரங்கராஜன், ஆடிட்டர் ஸ்ரீதர், அமைப்பாளர் ராஜி, சுகுணா மோட்டார்ஸ் சிவக்குமார், ஜெயலஷ்மி விலாஸ் ஓட்டல் கிருஷ்ணன்பட், கோவிந்தன்பட், கேசவன்பட் உள்ளிட்டோர், ராமர் கோவில் கட்டுமான பணிக்காக 87 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X