அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பி

Added : பிப் 20, 2021
Share
பெரியகுளம்:தேனி மாவட்டம்பெரியகுளத்தில் பெய்த மழையால் அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை போலீஸ்காரர் ராஜேந்திரன் 35, ஒயர்மேன் மாயி உதவியுடன் சரிசெய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பெரியகுளத்தில் நேற்று அதிகாலை 3:00 மணி முதல் 3:30 மணி வரை மழை பெய்தது. சுதந்திரவீதி, ஆடுபாலம் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. ரோந்து சென்ற தென்கரை போலீஸ்காரர் ராஜேந்திரன்
 அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பி

பெரியகுளம்:தேனி மாவட்டம்பெரியகுளத்தில் பெய்த மழையால் அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை போலீஸ்காரர் ராஜேந்திரன் 35, ஒயர்மேன் மாயி உதவியுடன் சரிசெய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பெரியகுளத்தில் நேற்று அதிகாலை 3:00 மணி முதல் 3:30 மணி வரை மழை பெய்தது. சுதந்திரவீதி, ஆடுபாலம் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. ரோந்து சென்ற தென்கரை போலீஸ்காரர் ராஜேந்திரன் பார்த்தார். யாரும் மின்கம்பியை மிதித்து விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் டூவீலரை நிறுத்தி அங்கேயே நின்றார்.

மேலும்வியாபாரிகள் சங்கத்தினர் ராஜவேல், விஜயகுமார் உதவியுடன் ஒயர்மேன் மாயியை வரவழைத்து 20 நிமிடம் மின்நிறுத்தம் செய்து அறுந்த மின்கம்பியை சரிசெய்தார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் பலர் ராஜேந்திரன், மாயியை பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X