கோவிலுக்கும் சுகாதார தரச்சான்று

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கோவை:உணவு பாதுகாப்பு துறை வழங்கும், 'போக்' (Blissful hygienic Offering to God) தரச்சான்று பெறுவதற்கான ஆய்வு பணி, கோவையில், ஐந்து கோவில்களில் முடிந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் வசம் உள்ள கோவில்களில், இறைவனுக்கு படைக்கும் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்து, 'போக்' தரச்சான்று வழங்கப்படுகிறது. கோவில்களில் உணவு

கோவை:உணவு பாதுகாப்பு துறை வழங்கும், 'போக்' (Blissful hygienic Offering to God) தரச்சான்று பெறுவதற்கான ஆய்வு பணி, கோவையில், ஐந்து கோவில்களில் முடிந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் வசம் உள்ள கோவில்களில், இறைவனுக்கு படைக்கும் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்து, 'போக்' தரச்சான்று வழங்கப்படுகிறது. கோவில்களில் உணவு கையாள்பவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.கோவையில், அன்னதானம் வழங்கும் கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, உணவுகளை கையாளும் மேற்பார்வையாளர்கள், 60 பேருக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் தரம் பார்த்து கொள்முதல் செய்வது முதல், சமைத்தல், வினியோகம் அனைத்திலும் சுகாதாரம் மற்றும் தரத்தை உறுதிபடுத்தும் விதத்தில், பயிற்சி அளித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறுகையில்,''சுகாதார தரச்சான்று பெற, கோவையில், ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில் சுய பரிசோதனை, முன்தணிக்கை முடிக்கப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், இக்கோவில்களுக்கு சுகாதார தரச்சான்று வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X