சின்னசேலம் : சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் தமிழ்ச்செல்வன்,23; இவர் ஆத்துார் அடுத்த வட சென்னிமலையில் உள்ள அரசு கல்லுாரியில் எம்.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் நேற்று மாலை கல்லுாரி முடிந்த பிறகு, வீட்டிற்கு தனது டிஎன்-15-பி-2877 பதிவெண் கொண்ட யமாகா எப்.இசட் பைக்கில் புறப்பட்டார்.அப்போது சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவனுார் அருகே வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை சென்டர் மீடியனில் மோதியது.இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE