புதுச்சேரி : புதுச்சேரி பாரதி பல்கலை, பேரவை சார்பில் பாரதி செல்வர் விருது வழங்கும் விழா மூலக்குளம் பாரதி பல்கலை., பேரவை அரங்கில் நடந்தது.
ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியை ஆறுமுகம் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி வரவேற்றார். புதுச்சேரி எழுத்தாளர் ராஜ்ஜாவின் பாரதியார் படைப்பு சேவையை பாராட்டி பாரதி செல்வர் விருதை லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., வழங்கினார்.எழுத்தாளர் ராஜ்ஜா, பாரதியின் வசன கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பாரதியின் சிறுகதைகள் பலவற்றை சாகித்ய அகாதமிக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த 10 ஆண்டுகளில் படைத்த படைப்புகள், அரவிந்தரோடு அவர் கொண்ட நட்பு பற்றி வெளிப்படுத்தினார். இதை பாராட்டி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரதி பல்கலைப்பேரவை தலைவர் பாரதிவாளர் சிவா, கவிஞர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE