போடி:திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்குவதற்காக தேனி மாவட்டம் போடியில் ரூ. பல லட்சம் மதிப்பில் தங்கத்திலான சங்கு, சக்கரம் கவசங்கள் சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தன.
போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை. இவர் போடி -- முந்தல் ரோட்டில் இலவம் பஞ்சு பேட்டை நடத்தி வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பாதம், மார்பு போன்ற தங்க கவசங்களை வழங்கி வருகிறார்.இந்த ஆண்டு பல லட்ச ரூபாய் மதிப்பிலான சங்கு, சக்கரத்திலான தங்க கவசம் வடிவமைக்கப்பட்டது. கவசங்களுக்கு திருப்பதி தேவஸ்தான பட்டாச்சாரியார்கள் மூலம் இவரது வீட்டில்சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வணங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE