விருதுநகர்:"ராகுல் காந்தி துாத்துக்குடியில் துவங்கி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வருகிறார். இந்த பயணம் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும்'' என விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.
விருதுநகரில் அவர் மேலும் கூறியதாவது:காந்தி சிலையை அகற்றியதற்காக போராடிய காங். எம்.பி., ஜோதிமணியை தரம் தாழ்ந்த விதத்தில் நடத்திய போலீசாரை கண்டிக்கிறேன். மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை பணத்தாலும், பதவி ஆசை காட்டியும் பா.ஜ., மிரட்டி வருகிறது. பா.ஜ.,வின் முழு ஒத்துழைப்போடு கவர்னர் தமிழிசை தலைமையில் புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
நிடி ஆயோக் கூட்டத்தில் கார்ப்பரேட்டுகளால் தான் வளர்ச்சி என பிரதமர் மோடி கூறியதன் மூலம் அவரது அரசு அதானி, அம்பானிக்கானது என்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அதிகாரத்தில் பங்களித்தும், குரல் கொடுத்தும் காங்., கட்சி இருந்து வந்துள்ளது. பா.ஜ., இதுவரை ஒரு லோக்சபா எம்.பி., சீட் கூட அம்மக்களுக்கு வழங்கியதில்லை'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE