பொது செய்தி

தமிழ்நாடு

இளங்கலை பாடப் பிரிவுகளில் சேர்க்கைக்கு கலந்தாய்வு துவக்கம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிகட்ட மாப் அப் கலந்தாய்வு நேற்று துவங்கியது. புதுச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பிரிவுகளான பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., உள்ளிட்ட பாட பிரிவு இடங்கள், சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்படுகிறது.மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பிறகு, காலியாக உள்ள இடங்களுக்கு மாப் அப் மூலம்

புதுச்சேரி, : அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிகட்ட மாப் அப் கலந்தாய்வு நேற்று துவங்கியது.

புதுச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பிரிவுகளான பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., உள்ளிட்ட பாட பிரிவு இடங்கள், சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்படுகிறது.மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பிறகு, காலியாக உள்ள இடங்களுக்கு மாப் அப் மூலம் நிரப்ப நேற்று பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு துவங்கியது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதி மாணவர்களும், மண்டல அலுவலகங்கள் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்றனர்.

முதல் நாளான நேற்று காலை எஸ்.சி., எஸ்.டி. பிரிவு, மீனவர், முஸ்லீம் பிரிவு மாணவர்களும், மதியத்திற்கு பிறகு புதுச்சேரி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. ஏற்கனவே இடம் கிடைக் காத மாணவர்கள், நேற்று பங்கேற்று கல்லுாரியில் சீட் பெற்றுச் சென்றனர்.இன்று காலை 9 முதல் மாலை 4:30 மணி வரை 2ம் நாள் கலந்தாய்வு நடக்கிறது. புதுச்சேரி மாநில அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இது வரை சீட் கிடைக்காத மாணவர் களும் பங்கேற்கலாம். பாட பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள், 23ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X