பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் சம்மேளன சங்க இயக்கத்தின் சிறப்பு கூட்டம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், கென்னடி நகர் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்தது.ஆனந்தராசன் தலைமை தாங்கினார். கலைச்செல்வன், புகழேந்தி, முருகவேல், செல்வன், கணேசன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கங்காதரன் சிறப்புரையாற்றினார். தொழிற்சங்க தலைவர் சங்கரன், தாகூர் கல்லுாரி

புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், கென்னடி நகர் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்தது.ஆனந்தராசன் தலைமை தாங்கினார்.

கலைச்செல்வன், புகழேந்தி, முருகவேல், செல்வன், கணேசன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கங்காதரன் சிறப்புரையாற்றினார். தொழிற்சங்க தலைவர் சங்கரன், தாகூர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் இளங்கோ வாழ்த்தி பேசினர். மாநில கடன் தொகையை மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மின் துறை தனியார் மயமாக்கலை தடுக்க வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம், வீட்டு வாடகை, கல்வி கட்டணம் வழங்க வேண்டும். அரசு துறை பணி கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டும்.

கருணை அடிப்படையில் வேலைக்காக காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். நீண்ட காலமாக பதவி உயர்வு பெறாத தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X