புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
தி.மு.க., வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட மாநில துணை அமைப்பாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார், தொண்டரணி அமைப்பாளர் செந்தில்வேலன் விருப்ப மனு பெற்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், லோகையன், மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விருப்ப மனுக்களை பெற்றவர்கள் முதல் கட்ட மாக வரும் 22ம் தேதி சென் னையில் தி.மு.க., தலைமை கழகத்தில் பணம் செலுத்த உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE