புதுவை முதல்வர் நாராயணசாமி ராஜினாமா?

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுச்சேரி : நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெருக்கடியை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா செய்வார் என தெரிகிறது. நேற்று இரவு மேலும் ஒரு காங். - எம்.எல்.ஏ. தன் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதால் காங். அரசின் 'கவுன்ட் டவுன்' துவங்கி விட்டது.புதுச்சேரியில் 2016ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 15 எம்.எல்.ஏ.க்களுடன்
புதுவை முதல்வர்,  நாராயணசாமி, ராஜினாமா,

புதுச்சேரி : நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெருக்கடியை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா செய்வார் என தெரிகிறது. நேற்று இரவு மேலும் ஒரு காங். - எம்.எல்.ஏ. தன் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதால் காங். அரசின் 'கவுன்ட் டவுன்' துவங்கி விட்டது.

புதுச்சேரியில் 2016ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 15 எம்.எல்.ஏ.க்களுடன் காங். ஆட்சி அமைந்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். காங். ஆட்சிக்கு மூன்று எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. மாகியைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் ஆட்சிக்கு ஆதரவு தருகிறார். இந்நிலையில் காங். - எம்.எல்.ஏ. தனவேலு கடந்தாண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் இருவரும் காங். - எம்.எல்.ஏ.க்கள் இருவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் காங். - எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 10 ஆக குறைந்தது.

அதாவது 28 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபையில் காங். ஆட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை.எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங். கட்சிக்கு 7 அ.தி.மு.க.வுக்கு 4 பா.ஜ.வுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங். ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதையடுத்து 22ம் தேதி (நாளை) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் தமிழிசை கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில் காங். - எம்.எல்.ஏ.விஜயவேணி நேற்று இரவு தன் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது. கடைசி நேர திருப்பத்தால் காங். - எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆகவும் சரிந்தது. அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்.சட்டசபை நாளை காலை 10:00 மணிக்கு கூட உள்ள நிலையில் புயல் காற்றில் சிக்கிய கப்பலாக காங். ஆட்சி தத்தளிக்கிறது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புநாளை 22ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளதால் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிருஷ்ணியா உத்தர விட்டார். இதையடுத்து காங். மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு துப்பாக்கி ஏந்திய
போலீஸ் பாதுகாப்பு நேற்று மாலை வழங்கப்பட்டது. காங். - எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு நியமன எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பு வேண்டாம் என போலீசாரை திருப்பி அனுப்பி விட்டனர்.


கண்காணிப்பில் எம்.எல்.ஏ.க்கள்ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் ஓட்டும் மிக மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளதால் தங்களது எம்.எல்.ஏ.க்களை கண் கொத்தி பாம்பாக ஒவ்வொரு கட்சி தலைமையும் கண்காணித்து வருகின்றன. எம்.எல்.ஏ.க்களை நிழலாக பின்தொடரும் உளவுப்பிரிவு போலீசார் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எங்கே செல்கின்றனர் யாரை சந்திக்கின்றனர் அவர்களை யார் சந்திக்கின்றனர் போன்ற விபரங்கள் திரட்டப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள் விசுவாசமான தொண்டர்கள் மூலமாக எம்.எல்.ஏ.க்களின் ஒவ்வொரு அசைவும் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற திரைமறைவு வேலைகளால் புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

நாளை, 22ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளதால், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா உத்தரவிட்டார். இதையடுத்து, காங்., மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நேற்று மாலை வழங்கப்பட்டது.

*காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒரு நியமன எம்.எல்.ஏ.,வுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்பு வேண்டாம் என போலீசாரை திருப்பி அனுப்பி விட்டனர்.


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambath kumar - pondicherry,இந்தியா
21-பிப்-202121:56:32 IST Report Abuse
sambath kumar Better you die immediately and save our state.shameless useless ldiot. LIABILITY of this nation
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202119:31:09 IST Report Abuse
Madhusoodhana Ramachandran பாவம் தவக்கள வாயன் இன்னும் ஒரு நஙகு மாதங்கள் தாக்கு பிடித்திருந்தால் முழு பதவி காலம் நல்ல படியாக வெளியேறி இருக்கலாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்க்கேற்ப நடக்கிறது. குறுக்கு வழியில் பதவியை பிடித்து இதனை நாள் தாக்கு பிடித்ததே பெரியது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-202117:45:26 IST Report Abuse
Endrum Indian சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று சாமி பாடுவது நன்றாக கேட்கின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X