காரைக்கால் : காரைக்காலில் துப்புரவு தொழிலாளி குழந்தை களுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த ஜேசுராஜ், 40; இவர் நகராட்சி தனியார் துப்புரவு நிறுவனத்தில் ஒப்பந்த டிரைவராக பணி புரிகிறார். இவருக்கு 6 மாதங்களாக சம்பளம் தரவில்லை. பலமுறை ஒப்பந்த நிறுவனத்திடம் ஜேசுராஜ் ஊதியம் கேட்டும் பதிலில்லை. இதனால் மனமுடைந்த ஜேசுராஜ், நேற்று காலை 10.30 மணியளவில், குப்பை அள்ளும் வாகனத்தில் இரு மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து ஜேசுராஜ் மற்றும் இரு மகன்களை எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.கவர்னர் தமிழிசை வருவதற்கு முன் துப்புரவு ஊழியர் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE