புதுச்சேரி : இந்திய கம்யூ., மாநில நிர்வாகிகள் குழு கூட்டம், முதலியார்பேட்டை கட்சி அலுவலத்தில் நடந்தது.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். கட்சி தேசிய செயலாளர் பல்லப்சென்குப்தா, மத்திய நிர்வாக குழு உறுப்பினர் அஜீஸ் பாஷா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தல் மற்றும் புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.இலவச அரிசி, முதியோர், விதவை ஓய்வூதியம், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் உள்ளிட்ட திட்டங்களை தற்போதைய கவர்னர் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும், பாரதி, சுதேசி, ஏ.எப்.டி., பஞ்சாலைகளை புனரமைக்க வேண்டும்.
நிர்வாக சீர்கேடு, ஊழல், முறைகேடுகளால் நலிவடைந்துள்ள அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்கி, ஊழியர்களின் ஊதிய நிலுவை பிரச்னைகளை தீர்க்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE