பார் ஊழியரை கொல்ல முயன்ற ரவுடி கும்பலால் பரபரப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி நகரப் பகுதியில் பார் ஊழியரை ரவுடி கும்பல் பட்டா கத்தியுடன் துரத்திச் சென்று வெட்ட முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி லபோர்தனே வீதியில் உள்ள எல்.பி.,-2 லான்ச் என்ற தனியார் பார் ரெஸ்ட்டாரண்டில், திப்பு சாகிப் வீதியைச் சேர்ந்த சையதுகான், 28; பவுன்சராக பணி புரிகிறார். கடந்த ஜனவரி 16ம் தேதி, இரவு 11:30 மணிக்கு, மூன்று பேர் கொண்ட

புதுச்சேரி : புதுச்சேரி நகரப் பகுதியில் பார் ஊழியரை ரவுடி கும்பல் பட்டா கத்தியுடன் துரத்திச் சென்று வெட்ட முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி லபோர்தனே வீதியில் உள்ள எல்.பி.,-2 லான்ச் என்ற தனியார் பார் ரெஸ்ட்டாரண்டில், திப்பு சாகிப் வீதியைச் சேர்ந்த சையதுகான், 28; பவுன்சராக பணி புரிகிறார். கடந்த ஜனவரி 16ம் தேதி, இரவு 11:30 மணிக்கு, மூன்று பேர் கொண்ட கும்பல், பாருக்குள் வந்தனர்.பார் மூடும் நேரமானதால் அனுமதியில்லை என சையதுகான் வெளியேற்றினார். ஆத்திரமடைந்த மூவரும் மறுநாள் 17ம் தேதி பாருக்குள் நுழைந்து சையது கானை தேடினர்.

அவர் இல்லாததால், மற்ற பவுன்சர்களான நெல்லித் தோப்பு அருள்படையாட்சி வீதி முருகன், 23; தனபால், 25; ஆகியோரை கத்தியால் வெட்டினர். திருவள்ளுவர் நகர் ரவுடி சத்யா, 22; விக்கி, 23; உள்ளிட்ட 4 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் நால்வரும் முன்ஜாமீன் பெற்றனர்.இதனால் பயந்த சையதுகான் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தார். நேற்று முன் தினம் மாலை டீ குடிக்க பைக்கில் வெளியே வந்ததை பார்த்த ரவுடி சத்யா தலைமையிலான கும்பல், அவரை பைக்கில் துரத்தினர். கேன்டீன் வீதி இமாக்குலேட் பள்ளி பின்புறம் இரு பைக்குகளும் மோதி கீழே விழுந்தனர்.

பைக்கை விட்டு தப்பி ஓடிய சையதுகானை ரவுடி கும்பல் பைக்கில் துரத்தியது.கேன்டீன் வீதி, ஆசிரமம் பெட்ரோல் பங்க், செஞ்சி சாலை வழியாக ஓடிய சையதுகான் அரசு மருத்துவ மனை அருகே கீழே விழுந்தார். துரத்தி வந்த ரவுடி கும்பல், சையதுகானை சுற்றி வளைத்து வெட்டி கொல்ல பட்டா கத்திகளை எடுத்தனர்.அப்போது பைக்கில் மூவராக சென்ற ரவுடி கும்பலை துரத்தி வந்த போக்குவரத்து காவலர் சத்தம் போட்டதால் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியது.சையதுகான் அளித்த புகாரின் பேரில், திப்ராயப்பேட்டை செபாஸ்டின், ரவுடி சத்யா, விக்கி மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து பெரியக்கடை இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X