காரைக்கால் : காரைக்காலில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாகிரதி அறிக்கை வாசித்தார்.ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடை பெற்று தந்த புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.மேலும் 5 ஆண்டுகள் நிரந்தர பணி முடித்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்க கோரி, மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருக்கு கடிதம் அனுப்புவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE