காரைக்கால் : அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார்.கவர்னர் தமிழசை சவுந்திரராஜன் நேற்று காரைக்கால் மாவட்டத்திற்கு வந்தார். கலெக்டர் அர்ஜூன் சர்மா வரவேற்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். அரசு பொது மருந்துவ மனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டார். காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை ஆய்வு செய்து மருந்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். சுகாதார மையத்தில் மரக்கன்றுகள் நட்டார். திருப்பட்டினம் பகுதி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., சீனியர் எஸ்.பி., நிகாரிகாபட், எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், ரகுநாயகன் உட்பட பலர் இருந்தனர்.
சகஜமாக பழகிய கவர்னர்காரைக்கால் அரசு மருந்துவமனைக்கு சென்ற கவர்னருக்கு மருந்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அனைவரிடமும் சகஜமாக பேசிய கவர்னர், அவர்களிடம் பெயர் , ஊர், குடும்ப உறவினர்கள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் போட்டோ எடுக்க விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து போட்டோ எடுத்த பிறகு புறப்பட்டார்.அங்கிருந்து திரும்பிய கவர்னரை பார்த்த மக்கள் சாலையோரம் நின்று கையசைந்தனர். உடனே காரை நிறுத்தி இறங்கி, மக்கள் கொடுத்த பரிசுகளை பெற்றார். அவர்களுடன் போட்டோ எடுத்த பிறகு புறப்பட்டார்.கவர்னர் தமிழிசை கூறுகையில், கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் சிறப்பாக பணி புரிந்த அரசு மருந்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் தயங்க வேண்டாம். பல இடங்களில் புதிய நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE