ஹாசன் : கல்லுாரி செல்வதாக வீட்டில் கூறி விட்டு, பஸ் நிலையத்தில் அமர்ந்து, மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடியும், இளம் பெண்களை கிண்டலடித்தும், நேரம் கழித்த மாணவர்களை, அரசு பஸ் நிலைய டிக்கெட் பரிசோதகர் விரட்டினார்.
பல மாதங்களுக்கு பின், கல்லுாரி திறக்கப்பட்டு, பாடங்கள் அவசர அவசரமாக நடத்தப்பட்டு வருகிறது. சில மாணவர்களோ, கல்லுாரிக்கு செல்லாமல், சினிமா, விளையாட்டு, பஸ் நிறுத்தம், பஸ் நிலையங்களில் அமர்ந்து அரட்டை அடித்து பொழுதை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.கல்லுாரி நேரம் முடிந்தவுடன், தங்கள் வீட்டிக்கு சென்று விடுகின்றனர். இந்நிலையில், ஹாசன் மாவட்டம், அரிசிகரே பஸ் நிலையத்தில், கல்லுாரிக்கு செல்லாமல், அரட்டை அடித்து கொண்டும், வீடியோ கேமில் விளையாடி கொண்டும், இளம் பெண்களை பார்த்து சில மாணவர்கள் கிண்டலடித்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், கல்லுாரிக்கு செல்லுமாறு கூறியும் யாரும் கேட்கவில்லை.உடனே, அவர், தனது மொபைல் போனின், வீடியோவை ஆன் செய்து, அங்கிருந்த மாணவர்களை நோக்கி, கல்லுாரிக்கு செல்லுங்கள் என கூறினார். இதை பார்த்த மாணவர்கள், தங்களை படம் பிடிக்கிறார் என கூறிக்கொண்டே, தலைதெறிக்க ஓடினர்.இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, டிக்கெட் பரிசோதகர் முயற்சியை பலரும் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE