திருவண்ணாமலை:புதிதாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க., ஒன்றிய செயலருக்கு, வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், 165 கிராமங்கள், கலசப்பாக்கத்தில், 121 கிராமங்கள் என, செங்கம் சட்டசபை தொகுதியில், 286 கிராமங்கள் உள்ளன. இங்கு, 32 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஒன்றிய செயலராக உள்ள, வெள்ளையன் என்பவர், மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. இதனால், மலைவாழ் மக்களுக்கு, அரசின் திட்டங்கள் முழுமையாக இங்கு செயல்படுத்தப் படவில்லை.
அதிருப்தியில் இருந்த கட்சியினர் கோரிக்கையை ஏற்று, இங்கு மேலும் ஒரு ஒன்றிய செயலர் நியமிக்கப் பட்டார். ஜமுனா மரத்துார் வடக்கு ஒன்றிய செயலராக வெள்ளையனையும், தெற்கு ஒன்றிய செயலராக அசோகனையும், கடந்த மாதம் கட்சி தலைமை நியமித்தது. இதற்கு வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்து, தன் ஆதரவாளர்கள் மூலம், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
'ஊர் ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது போல், தி.மு.க.,வினர், அதிருப்தியாளர்களின் ஓட்டுகளை கவர திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE