சிதம்பரம் : தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குடும்பத்தினருடன், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சவுந்திரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று இரவு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தெலுங்கானாவும், புதுச்சேரியும் இரட்டை குழந்தைகள். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனை மிகச்சரியாக செய்வேன்.புதுச்சேரியில் வேறு என்னென்ன பிரச்னைகள் உள்ளது என, தெரிந்து கொண்டு படிப்படியாக சரி செய்ய முயற்சி செய்வேன். சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் 22ம் தேதி பார்ப்போம்' என்றார்.
காரைக்கால் துணை கலெக்டர் ஆதாஷ், சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன், தாசில்தார் ஆனந்த் உடனிருந்தனர்.முன்னதாக பா.ஜ, நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE