அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினருக்கு சரியான பதிலடி :போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கரூர்:''தி.மு.க.,வினர் அடாவடி, கரூரில் எடுபடாது. நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தரகம்பட்டியில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு, நேற்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:முதல்வர் கனவில் இருக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட,

கரூர்:''தி.மு.க.,வினர் அடாவடி, கரூரில் எடுபடாது. நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தரகம்பட்டியில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு, நேற்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:முதல்வர் கனவில் இருக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட, ஏளனம் பேசியவர்கள் மத்தியில், முதல்வர் பழனிசாமி., சிறந்த ஆட்சி வழங்கி வருகிறார்.

தி.மு.க.,வினர், தோல்வி பயம் காரணமாக, குடும்பமே படையெடுத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.தி.மு.க., வினர் பிரச்னை பண்ண வேண்டும் என்றால், எங்கே வேண்டுமானாலும் பண்ணலாம். நாங்கள் இளைஞர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என நினைக்கிறோம். இளைஞர்களுக்கு பின், அவர்களின் குடும்பம் இருக்கிறது.நீங்கள், எதாவது வாங்கி ஊத்தி, எதையாவது பிரச்னை பண்ணி, எந்த வழியிலாவது ஜெயித்து விடலாம் என, கணக்கு போட்டு, அடாவடி செய்ய நினைத்தால், சரியான பதிலடி கொடுப்போம்.

'நீ சொல்ற, இன்னும் மூன்று மாதத்தில் நாங்கள் வந்தால், நரம்பு எடுப்போம் என்று. நாங்கள் நரம்பு மட்டுமல்ல, இன்னும் ஒன்னையும் சேர்த்து எடுப்போம். உன் டயலாக்கை, அங்கேயே வைத்துக் கொள். இங்கே எடுபடாது. உன்னுடைய சகாப்தம், கரூர் மாவட்டத்தில் முடிவு கட்டப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X