உடுப்பி : ''சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். நான்கு மண்டலங்களில் தடயவியல் ஆய்வகங்கள் நிறுவப்படும்,'' என உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, உடுப்பியில் நேற்று, அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.கார்காளாவிலுள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் அலுவலகத்தில், வெவ்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.போலீசாருக்காக கட்டப்பட்ட, 38 வீடுகளை திறந்து வைத்தார்.பின், அவர் பேசியதாவது:மாநிலம் முழுவதும், அடுத்த, மூன்றாண்டுகளில், 16 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படும். முதல் கட்டத்தில், 6,000 பணியிடம் நிரப்பும் பணிகள் நடக்கின்றன.
இதன் மூலம், போலீசின் பலம் மேலும் அதிகரிக்கும்.முகவர்கள் இடையூறின்றி, பாரபட்சமற்ற முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும். 'டார்க் வெப்' எனும் ஆன்லைன் மூலம், மக்களை இணைத்து, போதை பொருள் விற்று வந்த சர்வதேச கும்பலை, கர்நாடகா போலீசார் தான் கண்டுபிடித்தனர்.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். நான்கு மண்டலங்களிலும், தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து, சைபர் குற்றங்கள் தடுக்கப்படும்.பெலகாவி, மைசூரு, மங்களூரு, கலபுரகி ஆகிய மாவட்டங்களில், தடயவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
போலீஸ் நிர்வாகத்தில், சீர்திருத்தம் கொண்டு வரும் வகையில், மாநில, டி.ஜி.பி., தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.மார்ச், 31க்குள், அவர், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார். அதை பரிசீலித்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.மத கலவரங்களை துாண்டும் வகையில் செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பல புதிய திட்டங்கள், இம்முறை பட்ஜெட்டில் இடம் பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE