பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 7,000 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கடலுார : தமிழகத்தில் 7,000 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என, கண்டறியப் பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டசபை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுரி முன்னிலை

கடலுார : தமிழகத்தில் 7,000 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என, கண்டறியப் பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டசபை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுரி முன்னிலை வகித்தார்.ஓட்டுச்சாவடி மைய பாதுகாப்பு, மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க தேவையான வசதிகள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பதற்கான வசதிகள் செய்து கொடுப்பது, சமூக இடைவெளியுடன் ஓட்டளிப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு, ஓட்டுச்சாவடிகளில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க செய்யப்படவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளிலும் ஆண், பெண், 3ம் பாலினத்தவர்கள் என 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். தேவையான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.தற்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுப் பதிவு மையங்கள் கூடுதலாக பிரிப்பதன் மூலம் இம்மாவட்டத்தில் 702 புதிய ஓட்டுச்சாவடி மையங்களை ஏற்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

பதட்டமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 178 மையங்களும், தமிழகம் முழுதும் 7,000 ஓட்டுச்சாவடி மையங்களும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வுக்குப் பிறகு பதட்டமான ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பது குறித்து கல்லுாரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு, 100 சதவீத ஓட்டுப் பதிவு குறித்து உள்ளூர் தொலைக்காட்சி, எப்.எம்.,ரேடியோ பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தேர்தல் அதிகாரி கூறினார்.கூட்டத்தில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., (பொறுப்பு) கார்த்திகேயன், தேர்தல் தாசில்தார் பாலமுருகன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X